தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு மாநிலத்தின் 8 மாவட்டங்களில் இன்று(நவ.,11) கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே வரும் நவம்பர் 14ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடற்பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, நவம்பர் 14ம் தேதி உருவாக்கவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 16ம் தேதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும். இதனால் இந்த தாழ்வு பகுதி மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இன்று(நவ.,11) நிலவரப்படி, வழக்கத்தினை விட 13% குறைவாக பெய்துள்ளது என்றும் வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.