
சென்னையில் விடிய விடிய பெய்த மழை: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
சென்னையில் நேற்று இரவு முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகளும், காலையில் பணிக்கு செல்லும் மக்களும் போக்குவரத்து நெரிசலில் சிரமப்படுகின்றனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே.
காலை 6:30 மணியளவில் முதலில் வெளியான அறிவிப்பில் முதலில் பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து மாணவர்கள் பள்ளிக்கு கிளம்ப தயாரான நிலையில், 7 மணியளவில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
பல பள்ளி மாணவர்கள் இதனால் பள்ளியிலிருந்து வீடு திரும்பி கொண்டுள்ளனர்.
வானிலை அறிக்கை
மற்ற மாவட்டங்களின் நிலை:
சென்னையில் இன்று 10 மணி வரை பலத்த மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு இதன் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மற்றும் அந்தமட்டும் நெருங்கிய மாவட்டங்களில் கனமழை உண்டாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு! #SunNews | #ChennaiRain | #SchoolLeave
— Sun News (@sunnewstamil) November 12, 2024