Page Loader
9 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பதிவாகி இருக்கிறது.

9 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

எழுதியவர் Sindhuja SM
Sep 20, 2023
05:48 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, செப்டம்பர் 20 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. செப்டம்பர் 21 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல் செப்டம்பர் 22 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

டகாவிஜன்

செப்டம்பர் 22 

கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர் செப்டம்பர் 23 மற்றும் செப்டம்பர் 24 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. செப்டம்பர் 25 மற்றும் செப்டம்பர் 26 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.