6 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, ஆகஸ்ட் 22 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, திண்டுக்கல், மதுரை ஆகஸ்ட் 23 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 28 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
சென்னையின் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33- 34 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25- 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 - 35 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26- 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.