14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, செப்டம்பர் 2 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல, தர்மபுரி, கிருஷ்ணகிரி, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை செப்டம்பர் 3 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 8 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
சென்னையின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யலாம்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26- 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36- 37 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27- 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.