Page Loader
சென்னை நகரில் இரவு பெய்த கனமழை; விமான சேவைகள் பாதிப்பு 
சென்னை நகரில் விமான சேவைகள் பாதிப்பு

சென்னை நகரில் இரவு பெய்த கனமழை; விமான சேவைகள் பாதிப்பு 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 14, 2023
09:04 am

செய்தி முன்னோட்டம்

நேற்று இரவு, சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக, சென்னையின் வடக்கு பகுதிகளான அண்ணா நகர், அம்பத்தூர் போன்ற இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்தது. நேற்று இரவு முதல், இன்று அதிகாலை வரை சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததன் தொடர்ச்சியாக, பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், கனமழையின் எதிரொலியாக சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சார்ஜா, துபாய் விமானங்கள் தரை இறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட வேண்டிய 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. மேலும் துபாய், மும்பை, பாரீஸ் உள்ளிட்ட இடங்களுக்கு புறப்பட்ட விமானங்கள் சில மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இதனால் விமானப் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

ட்விட்டர் அஞ்சல்

விமான சேவைகள் பாதிப்பு