தமிழகத்திலுள்ள 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
கன்னியாகுமாரி கடற்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இன்று(நவ.,21)திருநெல்வேலி, தென்காசி, தேனி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, நாகப்பட்டினம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவாரூர், கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நாளை(நவ.,22) திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமாரி உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழையும்
13% குறைவாக பதிவாகியுள்ள வடகிழக்கு பருவமழை
ராமநாதபுரம், திண்டுக்கல், தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்டஇடங்களின் பல்வேறு பகுதிகளில் வரும் 24ம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை முன்னதாகவே தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலமாக வகுக்கப்பட்டுள்ள நிலையில், சராசரியான மழை பொழிவு 37 செ.மீ.,ஆகும். ஆனால் இந்தாண்டு நவம்பர் 15ம் தேதி வரையில் பதிவான மழையின் அளவு 24 செ.மீ., என்னும் நிலையில், வழக்கத்தினை விட 13% குறைவாக மழை பெய்துள்ளது என்று கூறப்படுகிறது.