Page Loader
தன் மீது சிறுநீர் கழித்த "பாஜக உறுப்பினரை" விடுவிக்க கோரினார் பழங்குடியின தொழிலாளி  
பழங்குடியினத் தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா கடந்த புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

தன் மீது சிறுநீர் கழித்த "பாஜக உறுப்பினரை" விடுவிக்க கோரினார் பழங்குடியின தொழிலாளி  

எழுதியவர் Sindhuja SM
Jul 08, 2023
05:48 pm

செய்தி முன்னோட்டம்

மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் பழங்குடியினத் தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவை விடுவிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பழங்குடியினத் தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா கடந்த புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலானதை அடுத்து, சுக்லா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்து ஆறு நாட்களுக்குப் பிறகு, காவல்துறையினர் கடந்த புதன்கிழமை குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

சஞ்சஸ்

"அவர் தனது தவறை உணர்ந்துவிட்டார்": பாதிக்கப்பட்டவரின் கோரிக்கை 

சுக்லாவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம்(IPC), மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் பிரிவுகள் 294(ஆபாசமான செயல்கள்) மற்றும் 504(அமைதியை மீறும் வகையில் வேண்டுமென்றே அவமதிப்பது) ஆகியவற்றின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தவிர, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுக்லாவுக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு(என்எஸ்ஏ) கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட சுக்லா பாஜகவை சேர்ந்தவர் என்ற செய்திகளும் வெளியாகியது. இந்நிலையில், "அரசாங்கத்திடம் எனது கோரிக்கை என்னவென்றால், அவர் தவறு செய்துவிட்டார்... இப்போது பிரவேஷ் சுக்லா விடுவிக்கப்பட வேண்டும். கடந்த காலத்தில் என்ன நடந்திருந்தாலும், அவர் தனது தவறை உணர்ந்துவிட்டார்." என்று பாதிக்கப்பட்ட பழங்குடியின தொழிலாளி ராவத் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.