'என் பையில் வெடிகுண்டு இருக்கு': பயணியின் மிரட்டலால் அவசரமாக தரையிறக்கப்பட்ட டெல்லி விமானம்
செய்தி முன்னோட்டம்
தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக பயணி ஒருவர் கூறியதை அடுத்து, 185 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த 'ஆகாசா' விமானம் நேற்று இரவு மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
"என்னுடைய பையில் வெடிகுண்டு இருக்கிறது" என்று பயணி ஒருவர் கூறியதையடுத்து, நேற்று நள்ளிரவு 12.42 மணிக்கு புனேயில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஆகாசா ஏர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தரையிறக்கப்பட்ட பின், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் குழு (BDDS) அவரசரமாக வரவழைக்கப்பட்டது.
எனினும், சோதனையின் போது, அவரது பையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.
ட்ஜகஃவ்
மிரட்டல் விடுத்த பயணி கைது
அதன்பின், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் பயணி கைது செய்யப்பட்டார்.
"அக்டோபர் 21, 2023அன்று அதிகாலை 12.07 மணிக்கு புனேயில் இருந்து டெல்லிக்கு பறந்து கொண்டிருந்த ஆகாசா ஏர் விமானம்(QP 1148), 185 பயணிகளையும் ஆறு பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பாதுகாப்பு எச்சரிக்கையைப் பெற்றது. பாதுகாப்பு நடைமுறைகளின்படி, விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. கேப்டன் தேவையான அனைத்து அவசர நடைமுறைகளையும் பின்பற்றி, நள்ளிரவு 12.42 மணிக்கு சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறங்கினார்" என்று ஆகாசா ஏரின் அதிகாரப்பூர்வ அறிக்கையி கூறப்பட்டுள்ளது.
அந்த பயணி நெஞ்சு வலி மாத்திரையை போட்டியிருந்ததால் தூக்க கலக்கத்தில் அப்படி பேசி இருக்கக்கூடும் என்று அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.