
ஜார்கண்ட் மருத்துவக்கல்லூரியில் தமிழக மருத்துவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலம் நாமக்கல்-புத்தூரை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளியான மதியழகன், இவரது மனைவி பூங்கோடி.
இவர்களுக்கு மதன்குமார்(28)என்ற மகனும், ஜனனி ஸ்ரீ (24)என்னும் மகளும் இருந்துள்ளனர்.
மகள் ஜனனி லேப் டெக்னீஷியனாக தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்.
மகன் மதன்குமார் தனது எம்.பி.பி.எஸ்.படிப்பினை முடித்துவிட்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தடயவியல் மருத்துவப்படிப்பு 2ம்.,ஆண்டு ராஜேந்திரன் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்துள்ளார்.
மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கி படித்துவந்த இவர் திடீரெனெ மாயமாகியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, சக மாணவர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
அப்போது அவர் விடுதியின் பின்புறம் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறை, சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகொலை
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் காவல்துறை
மேலும், கொலை நடந்த இடங்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு மொபைல் போன் மற்றும் சில கைரேகைகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது.
தமிழக மருத்துவர் மதன்குமாரை கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்கள் அவரை விடுதியின் மாடியில் வைத்து எரித்து பாதி எரிந்த பின்னர் மேலே இருந்து கீழே தள்ளிவிடப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் காவல்துறை, பிரேதப்பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழு விவரம் தெரியவரும் என்று கூறியுள்ளனர்.
இதனிடையே மருத்துவப்படிப்பு பயில வந்த தனது மகன் இறந்த செய்தி கேட்ட அவரது பெற்றோர் கதறி அழுத நிலையில் மதன்குமாரின் உடலை வாங்க தற்போது ராஞ்சிக்கு விமானம் மூலம் புறப்பட்டுள்ளனர்.