
சென்னையில் 16 அடிக்கு சரியும் நிலத்தடி நீர்மட்டம்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
செய்தி முன்னோட்டம்
சென்னையில் கடந்த மூன்று மாதங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக குறைந்துள்ளது.
மாதவரம் மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் மட்டும் 13 முதல் 16 அடி வரை சரிவு பதிவாகியுள்ளது.
மற்ற பகுதிகளில் 3 முதல் 10 அடி வரை நீர்மட்டம் குறைந்துள்ளதால், நகரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் 200 இடங்களில் நிலத்தடி நீர் அளவுப்பதிவுகள் நடைபெறுகின்றன.
இது மாதந்தோறும் கணக்கிடப்பட்டு, குடிநீர் வாரியத்துடன் இணைந்து நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2024 ஜூனில் வழக்கத்தைவிட 200% அதிகமாக, 20 செ.மீ. மழை பெய்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை தொடர்ந்து மிதமான மழை பெய்ததால், நிலத்தடியில் போதிய நீர் சேர்க்கப்பட்டது.
தேவை அதிகரிப்பு
வெயிலின் தாக்கம் - தண்ணீர் தேவை அதிகரிப்பு
இந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய வெயிலின் தாக்கம், குடிநீருக்கான தேவை அதிகரிக்கச் செய்துள்ளது.
வீடுகள், வணிக நிறுவனங்கள் அதிக அளவில் மோட்டார்கள் மூலம் நீர் உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
மாதவரம், அம்பத்தூர்: 13 - 16 அடி வரை நீர்மட்டம் சரிவு
மற்ற மண்டலங்கள்: 3 - 10 அடி வரை குறைவு
இந்த தண்ணீர் அளவு மே மாதத்திலும் 7 அடி வரை கூடுதல் சரிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
குடிநீர் வாரியத்தின் தரவுகளின்படி, தினசரி விநியோகம்: 107 கோடி லிட்டர்
குழாய் இணைப்பு மூலம்: 97 கோடி லிட்டர்
450 லாரிகள் மூலம்: 20 கோடி லிட்டர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.