
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்ய ஒப்புக்கொண்டார் ஆளுநர்
செய்தி முன்னோட்டம்
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்துவைக்க, ஆளுநர் ரவி ஒப்புகொண்டுள்ளார்.
முன்னதாக நேற்று வரை ஆளுநர் மறுப்பு தெரிவித்த நிலையில், அவருக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்து, ஒரு நாள் கெடு விதித்திருந்தது.
இதனையடுத்து, இன்று மாலை 3.30மணிக்கு பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. பல நேரங்களில், தமிழக அரசின் முடிவுகளை ஆளுநர் ஏற்பதில்லை.
அந்த வகையில் தான், சொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தால் 3 ஆண்டு காலம் தண்டனை விதிக்கப்பட்ட பொன்முடி, தனது சட்டமன்ற பதவியையும் அமைச்சர் பதவியையும் இழந்தார்.
எனினும், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு அந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
ட்விட்டர் அஞ்சல்
பதவி பிரமாணம் செய்ய ஒப்புக்கொண்டார் ஆளுநர்
#BREAKING | மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி!#SunNews | #RNravi | #Ponmudi pic.twitter.com/ZleTdaNKME
— Sun News (@sunnewstamil) March 22, 2024