சிக்கனலை மீறி வந்து கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதிய சரக்கு ரயில்
மேற்கு வங்காளத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதால் 8 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் இன்று காலை நடந்த இந்த விபத்தின் போது, கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது மோதிய சரக்கு ரயில் சிக்னலை மீறியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாமின் சில்சாரில் இருந்து கொல்கத்தாவின் சீல்டாவுக்குச் சென்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில், நியூ ஜல்பைகுரிக்கு அருகில் உள்ள ரங்கபானி ஸ்டேஷன் அருகே சென்று கொண்டிருந்த போது அதன் பின்னால் இருந்து வந்த சரக்கு ரயில் அதன் மீது மோதியது.
இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன
இந்த விபத்தினால் குறைந்தது 8 பேர் இறந்தனர் மற்றும் இரண்டு 50 பயணிகள் காயமடைந்தனர். மேலும், கஞ்சன்ஜங்கா ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டார்ஜிலிங் என்னும் பிரபலமான மலை வாசஸ்தலத்திற்கு பயணிக்க கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் அடிக்கடி சுற்றுலாப் பயணிகளால் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரயிலானது சிக்கன் காரிடர் எனப்படும் குறுகிய நிலப்பகுதியை கடந்து செல்லும் ஒரு ரயிலாகும். சிக்கன் காரிடர் எனும் பகுதியே வடகிழக்கு இந்தியாவை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது. இந்த பாதையில் ஒரு தானியங்கி சிக்னல் பிரிவு மட்டுமே உள்ளது. மேலும் இந்த பகுதி வழியாக பல ரயில்கள் தினமும் கடப்பதால், இது மிகவும் பிஸியான பகுதியாக உள்ளது.