
பாஜகவுடன் கூட்டணி இல்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
"தற்போது, மத்தியில் ஆளும் பா.ஜ.க-உடன் எந்த கூட்டணியும் அ.தி.மு.க வைத்துக்கொள்ளவில்லை" என அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செயல்பாடுகள் குறித்து பாஜக மேலிடத்தில் புகாரளித்துள்ளோம். பல முறை எச்சரித்தும் அண்ணாமலை அலட்சியப்படுத்துகிறார்" என்றார்.
"பாஜகவுடன் தற்போது அதிமுக கூட்டணியில் இல்லை. இது தான் அதிமுக கட்சி நிலைப்பாடு. கூட்டணி முறிவால் அதிமுகவுக்கு இழப்பு எதுவும் இல்லை. தனித்து நின்றால் நோட்டாவை கூட தாண்ட முடியாதவர் அண்ணாமலை. அதிமுகவுக்குள் ஒரு குழப்பமும் இல்லை. தேர்தல் வரும் போது தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.சில தினங்களுக்கு முன்னர், அதிமுக தலைவர் இபிஎஸ், டெல்லியில் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
ட்விட்டர் அஞ்சல்
பாஜகவுடன் கூட்டணி இல்லை
பாஜகவுடன் அதிமுக 2024-ல் கூட்டணி இல்லை! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு
— SathiyamTv (@sathiyamnews) September 18, 2023
#BreakingNews #ADMK #BJP #Election2024 #loksabha #AllianceBreaks #parlimentelection #Jayakumar #annamalaiBJP #SathiyamNews pic.twitter.com/jtKvRnfvt1