
சென்னை பெருங்களத்தூர் சாலையில் கடந்து சென்ற முதலை பிடிபட்டதா ?
செய்தி முன்னோட்டம்
'மிக்ஜாம்'-புயலால் சென்னையில் கடந்த டிச-3ம்.,தேதி இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியதில் சாலை எங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அப்போது, பெருங்களத்தூர்-நெடுங்குன்றம் சாலையில் முதலை ஒன்று சாலையை கடந்துச்செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.
இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், சுமார் 9 நாட்களுக்குப்பின் சென்னை பெருங்களத்தூரை அடுத்துள்ள ஆலப்பாக்கம் சாலையோரத்தில் உடல் மெலிந்த நிலையில் கிடந்த முதலையை கண்ட சிலர் அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
இவ்வீடியோ பதிவினை கண்ட வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து, பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு முதலையை பிடித்து அதனை கிண்டி உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர்.
இதனிடையே தற்போது பிடிபட்ட முதலை தான் சாலையை கடந்துச்சென்ற முதலையா?என்னும் கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சென்னையில் முதலை
#WATCH | சென்னை பெரு மழையின் போது பெருங்களத்தூர் சாலையில் உலா வந்த முதலை கண்டுபிடிப்பு?#SunNews | #ChennaiFloodRelief | #ChennaiRains | #Crocodiles pic.twitter.com/HeHebEbu6f — Sun News (@sunnewstamil) December 13, 2023