Page Loader
சென்னை பெருங்களத்தூர் சாலையில் கடந்து சென்ற முதலை - வைரல் வீடியோ
சென்னை பெருங்களத்தூரில் சாலையில் கடந்து சென்ற முதலை - வைரல் வீடியோ

சென்னை பெருங்களத்தூர் சாலையில் கடந்து சென்ற முதலை - வைரல் வீடியோ

எழுதியவர் Nivetha P
Dec 04, 2023
12:37 pm

செய்தி முன்னோட்டம்

'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னையில் நேற்று(டிச.,3)இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் பெருங்களத்தூர்-நெடுங்குன்றம் சாலையில் முதலை ஒன்று சாலையை கடந்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து தற்போது வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு கூறுகையில், 'சென்னையிலுள்ள நீர் ஆதாரங்களில் ஏற்கனவே முதலைகள் உள்ளது. கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பப்பெற்றுள்ள காரணத்தினால் ஒரு முதலை வெளியே வந்திருக்கக்கூடும்' என்றும், 'வனத்துறை அதிகாரிகள் முதலை நடமாட்டம் குறித்த தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், முதலை தென்பட்டால் பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்படும். எனவே, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்' என்றும் கூறியுள்ளார்.

புயல் 

இரவு வரை சென்னையில் மழை நீடிக்கும் 

மேலும் அப்பகுதியிலுள்ள நீர்நிலைகளில் மக்கள் இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் முதலையை கண்டதும் மக்கள் அதனை சீண்டி தொந்தரவு கொடுக்காத வரையில் அதனால் மக்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்றும் வனத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னையிலிருந்து மிக்ஜாம் புயலானது 100 கிமீ.,தொலைவில் மையம் கொண்டுள்ள நிலையில், மணிக்கு 10 கிமீ.,வேகத்திற்கு நகர்ந்து தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தொடர்ந்து, சென்னையில் இன்று இரவு வரை கனமழை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் புயல் காரணமாக 20 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

 பெருங்களத்தூர் வைரல் வீடியோ