செப்டம்பர் 23ஆம் தேதி நடக்கிறது 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குழுவின் முதல் கூட்டம்
செய்தி முன்னோட்டம்
'ஒரே நாடு ஒரே தேர்தல்' கொள்கையை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் முதல் அதிகாரப்பூர்வ கூட்டம், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மக்களவை, மாநில சட்டசபைகள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய பாஜக அரசு தீவிரமாக விவாதித்து வருகிறது.
இதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட ஒரு உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்தது.
சஜின்
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியகூற்றுகளை இந்த குழு ஆய்வு செய்யும்
இந்தக் குழுவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆயோக் தலைவர் என்.கே.சிங் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
உடனடியாக செயல்படத் தொடங்கி, விரைவில் பரிந்துரைகளை இந்த குழு வழங்க உள்ளது.
முன்னாள் மக்களவைச் செயலாளர் ஜெனரல் சுபாஷ் சி.காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே மற்றும் முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோரும் இந்த குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இந்தக் குழு அரசியலமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நோக்கத்திற்காக திருத்தங்கள் தேவைப்படும் பிற சட்டங்களில் குறிப்பிட்ட திருத்தங்களை ஆய்வு செய்து பரிந்துரைக்கும்.