சிவகாசியில் இரு வேறு இடங்களில் நேர்ந்த பட்டாசு விபத்து - 13 பேர் பலி
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் வரவுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியினை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ரெங்காபாளையம் என்னும் பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலை ஒன்றில் இன்று(அக்.,17) வெடி விபத்து நேர்ந்தது.
இதில் 5 பேர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதனை தொடர்ந்து படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நபர்களுள் மேலும் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே இந்த தீ விபத்து குறித்து தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயினை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றும் கூறப்படுகிறது.
பலி
உராய்வு ஏற்பட்டதன் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது
அதனை தொடர்ந்து விபத்து நிகழ்ந்த இடங்களில் யாரேனும் சிக்கியுள்ளனரா? என்றும் சோதனை செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே தகவலறிந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி உள்ளிட்டோரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து முதற்கட்ட விசாரணையில், தயாரிக்கப்பட்ட பாட்டாசுகளை பரிசோதித்து பார்க்கையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
இந்த நிகழ்வினை போலவே, சிவகாசி போடி ரெட்டியபட்டியில் இயங்கி வரும் ஓர் பட்டாசு ஆலையிலும் இன்று மதியம் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார் என்றும் தெரிகிறது.
பட்டாசு தயாரிக்கையில் உராய்வு ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்தது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.