பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வது? தீயணைப்புத்துறையினர் கூறும் அறிவுரை
இன்று தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்ண்டாடப்படுகிறது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகள் பகிர்ந்து, பட்டாசு வெடிப்பது மரபு. ஆனால் அந்த பட்டாசை வெடிக்கும் போது கவனமும், பாதுகாப்பும் மிக மிக அவசியம். ஆண்டுதோறும், பட்டாசு விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதை தவிர்க்க பொதுமக்கள் சிறிது சிரத்தை எடுத்து பட்டாசு வேடிக்கையில் கவனமுடன் இருக்க வேண்டும். இந்த நிலையில் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க என்ன செய்வது என தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சில நெறிமுறைகளை குறிப்பிடுகிறது.
பட்டாசு வெடிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
பெரியவர்களின் முன்னிலையில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்க நீண்ட ஊதுபத்தி பயன்படுத்த வேண்டும். பட்டாசு வெடிக்கும் இடத்தில் ஒரு வாளியில் தண்ணீரை வைத்திருக்க வேண்டும். செருப்புகள் அணிந்து கொள்ள வேண்டும். ராக்கெட் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும்; அவற்றை திறந்தவெளியில் வெடிக்கச் செய்யலாம். மருத்துவமனை, கோயில், மற்றும் குடிசை வீடுகள் அருகே பட்டாசு வெடிக்கக்கூடாது. அதிக ஒலியுடன் கூடிய பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. அரசு அறிவித்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வது?
தீக்காயம் ஏற்பட்டால், காயத்தில் உடனே தண்ணீர் ஊற்ற வேண்டும். சிலர் தண்ணீர் ஊற்றினால் கொப்புளம் வரும் என நினைக்கிறார்கள், ஆனால் அது தவறு. தண்ணீர் ஊற்றிய பிறகு அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இங்கே புளித்த மாவு போன்றவற்றை வைக்கக்கூடாது. பெரிதாக தீ விபத்து ஏற்பட்டால், உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்னதாக, உடல்நலம் பருமனாக உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளை பாதுகாப்பாக வெளியேற்றலாம். மின்சார பெட்டிகளை அணைத்து, கேஸ் சிலிண்டரை வெளியே கொண்டு வரவும்.