மனைவி பிரிவு தாங்காமல் தனியே தவித்த தந்தை - திருமணம் செய்து வைத்த மகள்
செய்தி முன்னோட்டம்
கேரளா மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்திலுள்ள திருவல்லா-திருஏறங்காவு என்னும் பகுதியினை சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குரூப்(62).
இவர் தனது மனைவி மற்றும் 2 மகள்கள், 1 மகன் ஆகியோரோடு அப்பகுதியிலுள்ள பகவதி அம்மன் கோவிலருகே கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இவரது மகள்களான ராஷ்மி மற்றும் ரெஞ்சு-க்கு திருமணம் முடிந்த நிலையில், மகன் ரஞ்சித் கொல்லத்தில் ஓர் விடுதியில் தங்கி தனது படிப்பினை மேற்கொண்டு வந்துள்ளார் என்று தெரிகிறது.
கேரளா
ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் துக்கத்தில் இருந்து மீளாத தந்தை
இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், ராதாகிருஷ்ணன் குரூப்'ன் மனைவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.
அவரது மரணத்திற்கு பிறகு ராதாகிருஷ்ணன் குரூப் வழக்கம்போல் இல்லாமல் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
நாட்கள் கடந்தால் அவர் இயல்பு நிலைக்கு மாறிவிடுவார் என்று பிள்ளைகள் நினைத்துள்ளனர்.
ஆனால் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அவர் தனிமையில் விரக்தியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இறப்பு
தந்தைக்கு பெண் தேடிய மகள்
இதனை வெளிநாட்டில் வசிக்கும் இவரது மகள் ரெஞ்சு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வீட்டிற்கு வந்திருக்கையில் அறிந்துள்ளார்.
இதனால் தான் மறுபடியும் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன்னர் தனது தந்தைக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார் ரெஞ்சு.
இதற்கு ராஷ்மி மற்றும் ரஞ்சித் ஒப்புதலளித்த நிலையில், இணையதளம் மூலம் திருமணத்திற்கான வரன்களை ரெஞ்சு பார்த்து வந்துள்ளார்.
அப்போது தான் மல்லிகா குமாரி(60) என்பவர் தனது கணவனை இழந்து தனிமையில் வாழ்ந்து வருவது தெரியவந்தது.
அவருக்கு குழந்தைகள் ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
2ம் திருமணம்
இருவீட்டார் சம்மதத்தோடு நடந்த திருமணம்
அதனை தொடர்ந்து, அந்த பெண் ராதாகிருஷ்ணன் குரூப்'க்கு பொருத்தமான ஜோடி என்று அவரது குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர்.
அதன் பின்னர், பெண்ணின் வீட்டாரிடம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அவர்கள் தரப்பும் ஒப்புக்கொண்ட நிலையில், ராதாகிருஷ்ணன் குரூப்'க்கும் மல்லிகாவுக்கும் 2வது திருமணம் கோயிலில் வைத்து நடத்தப்பட்டுள்ளது.
இதில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் 50 பேர் மட்டுமே கலந்துகொண்டனர் என்று கூறப்படுகிறது.
வாழ்க்கை துணை
வாழ்க்கை துணையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நிகழ்வு
வாழ்க்கை துணை என்பது இளம்வயதில் தேவைப்படுவதை விட வயது முதிர்ந்த காலகட்டத்தில் தான் அதன் அவசியம் புரியும்.
அதனால் தான் நம் முன்னோர்கள் திருமணத்தினை ஆயிரம் காலத்து பயிர் என்று கூறியுள்ளனர்.
இதனிடையே, தற்போதைய காலகட்டத்தில் தங்களது பெற்றோருக்கு ஒருவேளை சாப்பாடு போடுவதை கூட சுமையாக எண்ணும் பிள்ளைகள் மத்தியில்,
தனது மனைவியை இழந்து தனிமையில் தவிக்கும் தனது தந்தையின் உணர்வுகளை இந்த பிள்ளைகள் அறிந்துள்ளனர்.
அவருக்கு நறுமணமும் செய்து வைத்துள்ளனர் என்பது உண்மையில் பாராட்டத்தக்க விஷயமாகும்.