Page Loader
சென்னையில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது
(மாதிரி புகைப்படம்); சென்னையில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது

சென்னையில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது

எழுதியவர் Nivetha P
Oct 18, 2023
01:50 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தன்னை டிக்கெட் பரிசோதகர் என்று கூறிக்கொண்டு ஓர் நபர் பயணிகளின் டிக்கெட்டுகளை பரிசோதனை செய்துவந்துள்ளார். டிக்கெட் பரிசோதகருக்கான உடையினை அணிந்திருந்த அவர், புறநகர் ரயில் டிக்கெட்டுக்களையும் விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் இவரது நடவடிக்கைகளை கண்டு சந்தேகமுற்ற பயணி ஒருவர் இதுகுறித்து ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் அங்கு விரைந்த ரயில்வே காவல்துறை அந்நபரை அழைத்துச்சென்று விசாரணை செய்துள்ளனர். அப்போது, அவர் ஆந்திரா-குண்டூர் பகுதியினை சேர்ந்த வெங்கட கிஷோர்(42)என்பதும், போலியான பயணசீட்டுகளை அச்சடித்து மக்களிடம் விற்பனை செய்ததும் கண்டறியப்பட்டது. மேலும் இவர் காத்திருப்பு பட்டியலிலுள்ள டிக்கெட்டுகளை உறுதி செய்து தருவதாகக்கூறி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

கைது நடவடிக்கை