NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளாவில் வெடிகுண்டு தாக்குதல்: டிபன் பாக்ஸில் வெடிபொருட்கள் இருந்ததாக தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளாவில் வெடிகுண்டு தாக்குதல்: டிபன் பாக்ஸில் வெடிபொருட்கள் இருந்ததாக தகவல்
    குண்டுவெடிப்பு நடந்தபோது மாநாட்டு மையத்தில் 2,000 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

    கேரளாவில் வெடிகுண்டு தாக்குதல்: டிபன் பாக்ஸில் வெடிபொருட்கள் இருந்ததாக தகவல்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 29, 2023
    01:47 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவில் இன்று காலை ஒரு கிறிஸ்தவ மத வழிபாட்டு கூட்டத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானார் மற்றும் 36 பேர் காயமடைந்தனர்.

    கொச்சி மாநாட்டு மையத்தில் நடந்த யெகோவாவின் பிரார்த்தனைக் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் குறைந்தது மூன்று குண்டுவெடிப்புகள் நடந்தன.

    கொச்சி மாநாட்டு மையத்தில் அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கிய மூன்று நாள் கூட்டத்தின் கடைசி நாளான இன்று இந்த குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளன.

    குண்டுவெடிப்பு நடந்தபோது மாநாட்டு மையத்தில் 2,000 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

    முதல் குண்டுவெடிப்பு காலை 9.47 மணிக்கு நடந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    கிசுகிழ்ந

    தேசிய பாதுகாப்பு படையின் குழு கேரளாவுக்கு விரைந்து கொண்டிருக்கிறது 

    இந்த தாக்குதலுக்கு மேம்பட்ட வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டது என்றும், இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என்றும் கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த குண்டுவெடிப்புக்கு காரணமான வெடிபொருட்கள் டிபன் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த வழக்கை தீவிரவாத தடுப்பு அமைப்பான என்ஐஏ விசாரித்து வருகிறது. தேசிய பாதுகாப்பு படையின் குழுவும் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த குண்டுவெடிப்பு துரதிர்ஷ்டவசமானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து விடுமுறையில் இருக்கும் அரசு மருத்துவப் பணியாளர்கள் பணிக்கு வருமாறு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதல்வரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    பினராயி விஜயன்
    அமித்ஷா
    குண்டுவெடிப்பு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கேரளா

    முன்னாள் ஆளுநர், மூத்த காங்கிரஸ் தலைவர் வக்கோம் புருஷோத்தமன் காலமானார் காங்கிரஸ்
    5 வயது சிறுமியின் பலாத்கார விவகாரம்: மாநில அரசாங்கத்தை குற்றச்சாட்டும் கேரள காங்கிரஸ்  பலாத்காரம்
    நர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    நடிகை தமன்னா செய்த காரியம் - வைரலாகும் வீடியோ ஜெயிலர்

    பினராயி விஜயன்

    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் ஸ்டாலின்
    பெண்களின் பாதுகாப்பு குறித்து பொய் பிரச்சாரம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாது: கேரள முதல்வர் கேரளா
    கல்வியை காவி மயமாக்கும் செயல்: NCERT புத்தக பிரச்சனை குறித்து கேரள முதல்வர் கருத்து இந்தியா
    இந்தியாவின் முதல் தண்ணீர் மெட்ரோ திட்டம்.. 'கொச்சி வாட்டர் மெட்ரோ'  கேரளா

    அமித்ஷா

    தமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல்  இந்தியா
    அமுல் பால் கொள்முதலினை தடுத்து நிறுத்த கோரி அமித்ஷா'வுக்கு கடிதம் எழுதினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    மணிப்பூரில் தொடரும் வன்முறை: அமித்ஷா இன்று மணிப்பூர் செல்கிறார்  இந்தியா

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025