NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் 2024: கவனம் ஈர்க்கும் திண்டுக்கல் தொகுதி கள நிலவரம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் 2024: கவனம் ஈர்க்கும் திண்டுக்கல் தொகுதி கள நிலவரம் 
    பாமக கட்சி சார்பாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் திலகபாமா

    தேர்தல் 2024: கவனம் ஈர்க்கும் திண்டுக்கல் தொகுதி கள நிலவரம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 17, 2024
    07:47 am

    செய்தி முன்னோட்டம்

    வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இறுதிக்கட்ட வாக்குவேட்டை தீவிரமடைந்துள்ளது.

    ஒவ்வொரு வேட்பாளர்களும் நூதன முறையில் வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.

    இதனிடையே பல ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி களநிலவரத்தை சூடாக்கி வருகிறது.

    குறிப்பாக இந்தமுறை திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி நிலவரம் குறித்து தமிழ்நாடு டைம்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் கவனம் ஈர்த்துள்ளது.

    கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இதில் திமுக வேட்பாளர் வேலுச்சாமி 7,46,523 வாக்குகள் பெற்று 5,38,972 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரான ஜோதிமுத்து 2,07,551 வாக்குகளைப் பெற்றார்.

    மாறும் காட்சிகள்

    பாமக வேட்பாளருக்கு வீசும் சாதகமான அலை

    தற்போது தமிழ்நாடு டைம்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் இதே திண்டுக்கல் தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்களை விட பாமக வேட்பாளர் திலகபாமா அதிக வாக்குகளைப் பெறுவார் என தெரிவித்துள்ளது.

    கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி 28.80 சதவீத வாக்குகளையும், அதிமுகவின் கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ 15.57 சதவீத வாக்குகளையும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பாமக வேட்பாளர் திலகபாமா 35.23 சதவீத வாக்குகள், அதாவது கிட்டத்தட்ட 3,90,109 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெறுவார் என கணித்துள்ளது.

    காரணிகள்

    திலகபாமாவின் சாத்தியமான வெற்றிக்கு கூறப்படும் காரணிகள்

    கருத்துக்கணிப்பின் முடிவுகளின் படி, திலகபாமாவின் வெற்றிக்கு காரணமாக அமையவிருப்பது அவர் முன்னெடுத்த டாஸ்மாகிற்கு எதிரான தொடர் போராட்டங்கள் எனக்கூறப்படுகிறது.

    இந்த போராட்டங்கள் மூலமாக மக்களிடையே பரிட்சையமான திலகபாமாவிற்கு, திண்டுக்கல் தொகுதியில் பெண் வாக்காளர்களின் ஆதரவு அமோகமாக அதிகரித்துள்ளது.

    மேலும் ஒருபுறம் திமுக,அதிமுக இரண்டும் தனது சொந்த கட்சி வேட்பாளர்களுக்குப் பதிலாக கூட்டணி கட்சியினரைக் களமிறக்கியுள்ளதும், பெண் வாக்காளர்கள் அதிகமுள்ள திண்டுக்கல் மக்களவை தொகுதியில் பாமக பெண் வேட்பாளரை போட்டியிட வைத்ததும் பாசிட்டிவ் பாயிண்ட்களாக அமைந்துள்ளன.

    அதோடு விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் வாழ்க்கைத் தரம் உயரும் வகையில் திலகபாமா அறிவித்துள்ள வாக்குறுதிகளும், விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி தொடர்பான அறிவிப்புகளும் மக்களை கவர்ந்துள்ளது என அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல்
    தேர்தல் முடிவு
    திண்டுக்கல்
    திமுக

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தேர்தல்

    தேர்தல் 2024: விசிக தலைவர் தொல். திருமா சிதம்பரத்தில் போட்டியிடுகிறார் தொல். திருமாவளவன்
    தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு தேர்தல் ஆணையம்
    'சிலிண்டர் ரூ.500க்கும், பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும் விற்கப்படும்': தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது திமுக திமுக
    திமுக, அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு திமுக

    தேர்தல் முடிவு

    ஈரோடு இடைத்தேர்தல் முன்னிலை குறித்து திமுக தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் முத்துசாமி விளக்கம் ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல் - ஒற்றை இலக்கத்தில் வாக்குகளை பெற்ற 13 வேட்பாளர்கள் ஈரோடு
    கர்நாடக தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடையும் 92 சதவீத பெண் வேட்பாளர்கள் இந்தியா
    இன்று கர்நாடக தேர்தல் வாக்கெடுப்பு: எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும்  இந்தியா

    திண்டுக்கல்

    கரூர் மாவட்ட குளித்தலை கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணம் - தமிழக முதல்வர் இரங்கல் தமிழ்நாடு
    ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பற்றி எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி காவல்துறை
    தமிழக பள்ளியில் இந்து மாணவர்கள் குங்குமம், விபூதி வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியை - வைரல் வீடியோ தமிழக அரசு

    திமுக

    தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம்: எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் மத்திய அரசு
    கூட்டணி குறித்து இரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்: ம.நீ.ம கட்சி தலைவர் அறிவிப்பு கமல்ஹாசன்
    தேர்தல் 2024: காமிக்-கான் விழாவில் திமுக எடுத்த டிஜிட்டல் ட்விஸ்ட் சென்னை
    தேர்தல் களம் 2024: பாஜக கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025