அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்வு; அடுத்தாண்டு அமல்
இதுநாள் வரை, ரூ.150 என இருந்த அண்ணா பல்கலைகழகத்தின் தேர்வு கட்டணம் அடுத்தாண்டு முதல், 50% உயர்த்தப்பட்டு ரூ.225 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விழுப்புரத்தில் பேட்டி அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்த கட்டண உயர்வு அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என தெரிவித்தார். இந்த அதிகரித்த தேர்வு கட்டணம் காரணமாக, மாணவர்கள் ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் வீதம், ரூ.2050 செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, பட்ட சான்றிதழ் பெறுவதற்கான கட்டணமும் ரூ.1500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அதே நேரத்தில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தகுதி குறைவானவர்கள் துணை பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.