
பிரிட்டிஷ் கவுன்சில் வேலையை உதறி டீக்கடை நடத்தும் பெண்
செய்தி முன்னோட்டம்
"கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னை தூங்க விடாமல் பண்ணுவது" என்றார் அப்துல் காலம்.
"உங்களால் கனவு காண முடிந்தால், உங்களால் அதை செய்யவும் முடியும்." என்று கூறுகிறது வால்ட் டிஸ்னியின் ஒரு மேற்கோள்.
அதையே டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் செய்து காட்டி இருக்கிறார்.
'சாயோஸ்' போன்ற பிரமாண்ட டீ கடைகளை வைக்கும் நோக்கத்தோடு ஒரு சிறு டீ கடையை ஆரம்பித்திருக்கிறார் டெல்லியை சேர்ந்த ஒரு பட்டதாரி பெண்.
பிரிகேடியர் சஞ்சய் கண்ணா என்ற ராணுவ அதிகாரி இந்த கதையை தன் Linkedin பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
டெல்லி கான்ட்டில் இருக்கும் கோபிநாத் பஜார் என்ற இடத்திற்கு அவர் டீ குடிக்க சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
லட்சியம்
Linkedin பதிவில் அவர் கூறி இருப்பதாவது:
கோபிநாத் பஜாரில் ஆங்கிலம் பேசும் ஒரு புத்திசாலிப் பெண், தள்ளு வண்டியில் டீ விற்பதை பார்த்து நான் ஆச்சர்யமடைதேன். காரணத்தை அறியும் ஆர்வத்தில், அந்த பெண்ணிடம் வினவினேன்.
பிரபலமான 'சாயோஸ்' நிறுவனம் போல் ஊரெல்லாம் பெரிய டீ கடைகளை வைக்க வேண்டும் என்ற கனவு தனக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இந்த டீ கடை உரிமையாளர் ஷர்மிஸ்தா கோஷ், தனது கனவைத் தொடர பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்திலும் பணிபுரிந்துள்ளார்.
நிறைய பட்டதாரிகள் பெரிய வேலையை தேடி அலைந்து, அது கிடைக்காமல் துன்பப்படுகின்றனர். அவர்கள் இது போன்ற பெரிய கனவுகளை காணவேண்டும்.
வேலையில் உயர்வானது தாழ்வானது என்று எதுவுமே கிடையாது. நம் கனவு உயர்வாக இருந்தால் போதும்.