கல்வி, வேலை, சுதந்திரம்: ஆப்கான் பெண்ணின் புதுவிதமான எதிர்ப்பு போராட்டம்
ஆப்கான் பெண் ஒருவர் பொது சுவற்றில் "கல்வி, வேலை, சுதந்திரம்" என்று பெயிண்ட்டால் எழுதும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு தாலிபான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது. அப்போதிலிருந்து, பெண்களுக்கு எதிரான பல தடைகளையும் கட்டுப்பாடுகளையும் தாலிபான் அரசு விதித்து வருகிறது. பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்பதற்கு தடை, பெரும்பாலான துறைகளில் வேலை செய்வதற்கு தடை போன்ற ஒடுக்குமுறைகள் விதிக்கப்பட்டடுள்ளன. இந்த தடைகள் மனித உரிமைகளை மீறுவதால் பல்வேறு சர்வதேச இயக்கங்களும் அரசுகளும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ஆப்கான் பெண் ஒருவர் பெண்களுக்கான கல்வி, வேலை மற்றும் சுதந்திரத்தை வலியுறுத்தும் விதமாக நூதன முறையில் போராடும் ஒரு வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.