
பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற தடை: தாலிபான் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
ஒரு வருடத்திற்கு முன், ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான் கைப்பற்றியதில் இருந்தே அந்நாட்டு மக்களுக்கு பலவிதமான தடைகளை தாலிபான் அரசு விதித்து வருகிறது.
முக்கியமாக, அந்நாட்டு பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் சர்வதேச மனித உரிமை மீறல் என்று கூறப்படுகிறது.
இதுவரை ஆப்கான் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகள்:
மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர் கல்வி படிப்பில் இருந்து பெண்கள் தடை செய்யப்பட்டனர்.
மருத்துவம் மற்றும் கல்வி ஆகிய துறைகளை தவிர பெரும்பாலான பிற துறைகளில் பெண்கள் வேலை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
ஆண் துணை இல்லாமல் பெண்கள் 70 கிமீ-க்கு மேல் பயணம் தடை உள்ளது.
பொது இடங்களில் பெண்கள் தங்கள் முகத்தை காட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
விமானத்தில் பயணம் செய்ய பெண்களுக்கு தடை இருக்கிறது.
தாலிபான்
புதிதாக விதிக்கப்பட்டிருக்கும் தடைகள்
தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் மாகாணத்தில் பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் பெண்கள் வணிக வளாகங்களில்(Mall) பணிபுரிவதை தாலிபான் தடைசெய்துள்ளது.
அழகு நிலையங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் அழகு நிலையங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு கடைகளை வாடகைக்கு விட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் விளையாடும் பெண்கள் யாரும் விளையாட செல்ல கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், இது குறித்து ஆப்கான் பெண்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.