Page Loader
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் நடந்த என்கவுன்ட்டரில், ஒரு ராணுவ வீரர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் நடந்த என்கவுன்ட்டரில், ஒரு ராணுவ வீரர் பலி

எழுதியவர் Sindhuja SM
Jul 06, 2024
05:02 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் குறைந்தது ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். குல்காம் மாவட்டத்தில் உள்ள மோடர்காம் கிராமத்தில் உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையைத் தொடங்கியதை அடுத்து துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்நிலையில், குறைந்தது இரண்டு அல்லது மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் அவர்களின் மறைவிடத்தில் வளைக்கப்பட்டுள்ளனர். இந்த என்கவுண்டர் நடைபெற்று வருவதால், இது குறித்த மேலும் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. கடந்த மாத தொடக்கத்தில், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையின் போது தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பயங்கரவாத அமைப்பின் இரண்டு உயர்மட்ட தளபதிகள், அவர்கள் மறைவிடமாக பயன்படுத்திய வீட்டில் சிக்கிக்கொண்டனர்.

ட்விட்டர் அஞ்சல்

சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள்