'வாக்களிக்கும் உரிமைக்கு தகவல் அவசியம்': தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
செய்தி முன்னோட்டம்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில்,"வாக்களிக்கும் உரிமைக்கு தகவல் அவசியம்" என்று என்று கூறி, தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்யவேண்டுமென உச்ச நீதிமன்றம் ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளது.
வாக்காளர்கள் வாக்களிக்கத் தேவையான அத்தியாவசிய தகவல்களைப் பெற உரிமை உண்டு என்றும், தேர்தல் செயல்பாட்டில் அரசியல் கட்சிகள் முக்கியப் பங்காற்றுகின்றன என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.
ஜனவரி 2018 இல் தொடங்கப்பட்ட, தேர்தல் பத்திரங்கள் திட்டம் என்பது தனிநபர்கள் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், ஒரு வங்கியிலிருந்து வாங்கி அரசியல் கட்சிக்கு வழங்கக்கூடிய நிதிக் கருவிகள் ஆகும். அரசியல் பங்களிப்பை சட்டம் அனுமதிக்கும் போது, பங்களிப்பாளர்களின் தொடர்புகளையும் அது சுட்டிக்காட்டுகிறது என்றும், அவர்களைப் பாதுகாப்பது அரசியலமைப்பின் கடமை என்றும் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கூறினார்.
தேர்தல் பத்திரங்கள்
தேர்தல் பாத்திரங்கள் குறித்து நீதிபதிகள் கூறியது என்ன?
அரசியல் கட்சிகள் தேர்தல் செயல்பாட்டில் தொடர்புடைய அமைப்புகள் என்றும், அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி செய்பவர்கள் பற்றிய தகவல்கள் அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நிதி அளிப்பவர்கள் பற்றிய விவரங்களைக் குறிப்பிடாத தேர்தல் பத்திரங்கள் அரசியல் சானத்தின் பிரிவு 19(1)(a) இன் கீழ் தகவல் அறியும் உரிமையை மீறுவதாகவும் உச்ச நீதிமன்றம் கூறுகிறது.
தனிநபர்கள், வர்த்தக நிறுவனங்கள், கட்சியினர் தங்களது அடையாளங்களை வெளிப்படுத்தாமல், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கு வசதியாக இந்தத் தேர்தல் பத்திரத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இத்திட்டத்தின் விதிகளின்படி, இந்தியாவின் எந்தவொரு குடிமகன், நாட்டில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட நிறுவனம் தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். இந்த பத்திரங்கள் ரூ. 1,000 முதல் ரூ 1 கோடி வரை பல்வேறு மதிப்புகளில் கிடைக்கின்றன.