4 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, பிரதமர் நரேந்த மோடி தமிழகம் வருகிறார்.
நான்கு நாள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ள பிரதமர், ஏப்ரல் 9, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ள பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வார்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
இதற்காக மாநிலம் முழுவதும் கட்சி தலைவைவர்களும் வேட்பாளர்களும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜக சார்பில் பிரதமர் மற்றும் அமித் ஷா இருவரும் தமிழகம் வரவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளையில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி வரவிற்கிறார்.
மோடியின் பயணம்
4 நாள் பிரதமரின் பயணத்திட்டம்
வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ்நாடிற்கு வரும் பிரதமர் மோடி காலை வேலூரில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாகன பேரணியிலும் தொடர்ந்து மாலை தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ் உள்ளிட்டோருக்கு ஆதரவாகவும் பிரச்சார பேரணி செய்யவுள்ளார்.
பின்னர், ஏப்ரல் 10 ஆம் தேதி நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை ஆதரித்து வாகன பேரணியும், கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலையை ஆதரித்து பொதுகூட்டத்திலும் பேசவுள்ளார்.
பின்னர், ஏப்ரல் 13 ஆம் தேதி பெரம்பலூரில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தரை ஆதரித்தும், ஏப்ரல் 14 ஆம் தேதி விருதுநகரில் ராதிகா சரத்குமாரை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார்.