NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை 
    சத்தீஸ்கரில் 49 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.

    தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 03, 2023
    12:32 pm

    செய்தி முன்னோட்டம்

    சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், 3 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.

    மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை விட பாஜக முன்னிலை வகிக்கிறது.

    மத்திய பிரதேசத்தில் 158 தொகுதிகளிலும், ராஜஸ்தானில் 112 தொகுதிகளிலும் மற்றும் சத்தீஸ்கரில் 49 தொகுதிகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது.

    எனினும், தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி 68 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

    டவ்கிரோஜ்

    கஜ்வேலில் கேசிஆர் முன்னிலை; சத்தீஸ்கர் முதல்வர் பாகேல் பின்னடைவு 

    மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், தெலுங்கானாவில் காங்கிரஸ் பெரும்பான்மையை தாண்டியுள்ளதாக ஆரம்ப காலப் போக்குகள் காட்டுகின்றன.

    தெலுங்கானா முதலமைச்சரும் பாரத ராஷ்டிர சமிதியின்(பிஆர்எஸ்) தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் கஜ்வேலி தொகுதியில் முன்னிலையில் உள்ளார். ஆனால் காமரெட்டி தொகுதியில் பின்தங்கியுள்ளார்.

    இதேபோல், காங்கிரஸ் தலைவரும் சத்தீஸ்கர் முதல்வருமான பூபேஷ் பாகேல் தனது தொகுதியான படான் தொகுதியில் பின்தங்கியுள்ளார்.

    டவ்ஜஃபின்

    ராஜஸ்தான் முதல்வர் கெலாட் முன்னிலை

    ராஜஸ்தானின் தற்போதைய முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியிலும், முன்னாள் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே, ஜால்ராபதான் தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

    மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவரது தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

    மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் தொடக்கத்தில் பின்தங்கி இருந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) பல்வீர் சிங் தண்டோடியாவை விட பாஜகவின் நரேந்திர சிங் தோமர் டிம்னி தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

    சஜ்ஜில்கஃவ்

    டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டம்

    தெலுங்கானாவில் காங்கிரஸ் பெரும்பான்மையை தாண்டியுள்ள நிலையில், புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் ஏற்கனவே கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன.

    மேலும், காங்கிரஸின் வெற்றி பெற்றதும் அதை கொண்டாட ஹைதராபாத் தாஜ் கிருஷ்ணாவில் சொகுசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தெலுங்கானா மாநில கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டியின் இல்லத்திற்கு வெளியே பட்டாசுகளை வெடித்து தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    அது போக, ராஜஸ்தானில் பாஜக முன்னிலையில் உள்ளதை அடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள பாஜக மாநில தலைமையகத்திற்கு வெளியே பாஜக தொண்டர்கள் ஆடி பாடி கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஜெய்ப்பூரில் உள்ள பாஜக மாநில தலைமையகத்தில் கொண்டாட்டம் 

    जयपुर में बीजेपी मुख्यालय के बाहर#RajasthanElectionResults pic.twitter.com/HFVngYE8QU

    — Avdhesh Pareek (@Zinda_Avdhesh) December 3, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல்
    தேர்தல் முடிவு
    தேர்தல் ஆணையம்
    தெலுங்கானா

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    தேர்தல்

    மீண்டும் கோவையில் களமிறங்குகிறார் கமல்ஹாசன்  கோவை
    முடிவடைந்தது 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழுவின் முதல் கூட்டம்: என்ன விவாதிக்கப்பட்டது? இந்தியா
    அதிமுகவின் கூட்டணிக்கு புதுபெயர்? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி  அதிமுக
    கூட்டணியிலிருந்து விலகிய அதிமுக - பாஜகவுடன் இணையும் ஓபிஎஸ், டிடிவி ? பாஜக

    தேர்தல் முடிவு

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! குஜராத்
    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு இந்தியா
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? குஜராத்

    தேர்தல் ஆணையம்

    தேர்தல் ஆணையர் நியமனத்தில் புது நடைமுறை - உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இந்தியா
    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் இந்தியா
    ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பிற்கான கால அவகாச நீட்டிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் தமிழ்நாடு

    தெலுங்கானா

    ஜிம்மில் உடற்பயிற்சியின் போது சுருண்டு விழுந்து பலியான போலீஸ் கான்ஸ்டபிள் - அதிர்ச்சி வீடியோ உடற்பயிற்சி
    21 ஆம் நூற்றாண்டிலும் தொடரும் அக்னி பரீட்சை: ஆனால் ஒரு டிவிஸ்ட்! மாநிலங்கள்
    மார்ச் 24ஆம் தேதி விசாரணைக்கு வரும் BRS தலைவர் கவிதாவின் மனு டெல்லி
    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025