Page Loader
ஆந்திரா, கேரளா மாநிலத்திலிருந்து இறக்கப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள்
சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்று கைது செய்தனர் அமலாக்கத்துறையினர்

ஆந்திரா, கேரளா மாநிலத்திலிருந்து இறக்கப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 15, 2023
08:57 am

செய்தி முன்னோட்டம்

நேற்று(ஜூன் 14.,) முழுவதும், தமிழ்நாட்டின் அரசியல் சூழல் பரபரப்பாக காணப்பட்டது. அதற்கு காரணம், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக அவர் உடல்நலம் குன்றி, ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் தான். சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததாக அமலாக்கத்துறையினரால் நடத்தப்பட்ட இந்த ரைடு குறித்து புதுத்தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி, இந்த சோதனைக்காக அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா போன்றவற்றிலிருந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனராம். இவர்கள் அனைவரும் சென்னை, கோவை என சோதனை நடைபெறும் இடங்களுக்கு அருகே ஒரு நாள் முன்னரே முகாமிட்டுள்ளனர். அங்கிருந்து மறுநாள் அதிகாலை, அதாவது செவ்வாய் கிழமை (ஜூன் 13 .,) சோதனை நடத்த வேண்டிய இடங்களுக்கு குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர்.

card 2

ஒரு வாரமாக நோட்டமிட்ட அமலாக்கத்துறையினர் 

இந்த சோதனை குழுக்கள், கைப்பற்றப்படும் ஆவணங்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை, உடனுக்குடன் டெல்லியில் இருந்த உயர்அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பும் விதமாக, கையோடு லேப்டாப்பையும் கொண்டு வந்துள்ளனர். சேகரிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தையும், அவர்களுக்கு அனுப்பிய பிறகு, அவர்கள் உத்தரவின் பேரில், அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் சோதனை அதிகாரிகள். மேலும், இந்த சோதனைக்கு முன்னர் ஒரு வாரமாக, செந்தில் பாலாஜியின் நடவடிக்கைகளை அவர்கள் கண்காணித்ததாகவும் கூறப்படுகிறது. மறுபுறம், செந்தில் பாலாஜியும் இந்த சோதனையை எதிர்பார்த்ததாகவே கூறப்படுகிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜி சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பெயில் உள்ளிட்ட 3 வழக்குகளின் விசாரணை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.