உத்திரபிரதேசம் மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவினைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக அந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, ஜனவரி 10ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 17ஆம் தேதி.
பின்னர், பிப்ரவரி 5ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதைத்தொடர்ந்து வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்படும்.
ஈரோடு மட்டுமின்றி, உத்திரபிரதேசத்தில் அன்றே இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனுடன் டெல்லி சட்டமன்றத்திற்கும் அன்றைய நாளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
embed
Twitter Post
#BREAKING | ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு#SunNews | #ErodeEastByPolls | #ECI pic.twitter.com/wvlQFDeszC— Sun News (@sunnewstamil) January 7, 2025
விவரங்கள்
ஈரோடு தொகுதி விவரங்கள்
2011-இல் ஈரோடு கிழக்கு தொகுதி உருவாக்கப்பட்டது. முதலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றார்.
2016-ல், அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வெற்றிபெற்றார். 2021-ல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வெற்றிபெற்றார்.
அவர் மறைந்த பிறகு 2023-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
அதில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். எனினும் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்.
இதன் பின்னர், ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.
நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,26,433 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 1,09,636 ஆண் வாக்காளர்கள், 1,16,760 பெண் வாக்காளர்கள் மற்றும் 37 இதர வாக்காளர்கள் உள்ளனர்.