Page Loader
டெல்லி-என்சிஆரில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது; பீதியில் அலறிய மக்கள்
டெல்லி-என்சிஆரில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது

டெல்லி-என்சிஆரில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது; பீதியில் அலறிய மக்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 10, 2025
09:36 am

செய்தி முன்னோட்டம்

இன்று, ஜூலை 10, வியாழக்கிழமை காலை டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் (NCR) பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. காலை 9.04 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது. தேசிய நில அதிர்வு மையத்தின்படி, காலை 9.04 மணிக்கு ஹரியானாவின் ஜஜ்ஜாரில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது தேசிய தலைநகர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இது டெல்லியில் இருந்து கிட்டத்தட்ட 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தொடர்ந்து, இதன் அதிர்வுகள் டெல்லி, நொய்டா, காசியாபாத், குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய இடங்களில் உணரப்பட்டது. இந்த திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அலறியடித்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிய காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post