போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்
இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாகிய போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக், அடுத்தகட்ட விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முன்னாள் திமுக நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், கடந்த மார்ச் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரித்து வந்த NCB போலீசாருக்கு, போதைப்பொருட்கள் சென்னை மற்றும் திருச்சியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோன்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை விமானம் மூலமாக சென்னை அழைத்து வரப்பட்டார் ஜாபர் சாதிக். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.