வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுவதும், 6.11 கோடி வாக்காளர்கள்
மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தன் படி, வாக்காளர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, இன்று, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுப்ரியா சாஹு இந்த பட்டியலை வெளியிட்டார். அவர் கூறிய தகவலின் படி, தற்போது வரை, தமிழகம் முழுவதும், 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெறுவது வழக்கம். இந்த வரைவு பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், திருத்தும் மேற்கொள்ள விரும்புபவர்கள் அல்லது பெயர் சேர்க்க விரும்புபவர்கள், வாக்காளர் முகாம்களை அணுகலாம்.
டிசம்பர் 19 வரை பெயர் திருத்தம் செய்யலாம் என அறிவிப்பு
வரைவு வாக்காளர் பட்டியலில், பெயர் திருத்தம், நீக்கம், புதிதாக இணைய விரும்புபவர்கள், வாக்குசாவடியை அணுகி, அங்குள்ள அதிகாரிகளிடம் நேரடியாகவோ, இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம். இதற்காக, நவம்பர் 4, 5, 18, மற்றும் 19 ஆகிய நான்கு தேதிகளில், தமிழகம் முழவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுப்ரியா சாஹு தெரிவித்தார். டிசம்பர் 19 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்யவும், புதிதாக இணைக்கவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, திருத்தப்பட்ட, இறுதி வாக்காளர் பட்டியல், ஜனவரி 2024-ல் வெளியிடப்படும்.