ஆளும்கட்சி அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு; விழுப்புரம் மக்களிடமிருந்து கொந்தளிப்பு
விழுப்புரம் இருவேல்பட்டு பகுதியில், புயல் நிவாரணப் பணிகள் குறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற ஆளும் திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம் சிகாமணி ஆகியோர் மீது கிராம மக்கள் சேற்றை வீசி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிகழ்வு அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது. ஃபென்சல் புயல் காரணமாக, விழுப்புரம் பகுதியில் கனமழை பெய்து பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு, கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதற்கான மீட்பு பணியில் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். வீட்டிற்குள் வெள்ளநீர் சூழ்ந்ததால், பொது மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் காரில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது.