முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்த 'நீட் விலக்கு நம் இலக்கு' இயக்கத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு(நீட்) எதிராக மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கத்தை தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்தை தொடங்கி வைத்த தமிழக முதல்வரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் அந்த இயக்கத்திற்கு சார்பாக முதலில் கையெழுத்திட்டார். நீட் தேர்வுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கத்தின் மூலம், தங்களது எதிர்ப்பைக் தெரிவிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை சேகரிக்க உள்ளதாக திமுக கட்சி தெரிவித்துள்ளது. நீட் தேர்வை பாரதிய ஜனதா கட்சி அரசியல் ஆக்குகிறது என்று கூறி, நீட் தேர்வை நடத்தக் கூடாது என்று கடந்த சில மாதங்களாகவே ஸ்டாலின் போராட்டம் நடத்தி வருகிறார்.
50 லட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துகளை திமுக சேகரிக்குமா?
இந்த தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்றும், நகர்ப்புற மாணவர்களுக்கும், பயிற்சி மையங்களுக்கு செல்ல வசதி உள்ள மாணவர்களுக்கும் ஆதரவாக இருக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ள திமுக, நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வால் 22 மாணவர்கள் உயிரிழந்ததையடுத்து , திமுக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதற்கு முன்பு, நீட் தேர்வுக்கு தடை கோரி திமுக ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துகளை திமுக சேகரித்தால், அந்த ஆவணங்கள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பப்படும். மேலும், நீட் தேர்வை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படும்.