Loading...
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? பசும்பொன்னில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அளித்த பதில்
சீமான் கோரியுள்ள ஆதரவு குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? பசும்பொன்னில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அளித்த பதில்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 30, 2026
02:14 pm

செய்தி முன்னோட்டம்

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்பது குறித்த கேள்விக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்ற மு.க.ஸ்டாலின், தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலினிடம், சீமான் போட்டியிடுவது மற்றும் அவர் கோரியுள்ள ஆதரவு குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர், "முதலில் தேர்தல் ஆணையம் சார்பில் இடைத்தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படட்டும். அதன்பிறகு அதுபற்றி பரிசீலித்து முடிவெடுப்போம்" எனத் தெரிவித்தார்.

இடைத்தேர்தல்கள்

காலியாக உள்ள 5 தொகுதிகள்

தமிழகத்தில் சமீபத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்தன.

தற்போது திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 தொகுதிகள் காலியாக உள்ளன.

இத்தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்காத நிலையிலும், அம்பாசமுத்திரத்தில் போட்டியிடப் போவதாகவும், பிற கட்சிகள் ஆதரவளித்தால் வரவேற்பதாகவும் சீமான் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வேட்பாளரை அறிவித்து சீமான் பிரசாரக் களத்தை சூடேற்றியுள்ள நிலையில், மு.க. ஸ்டாலினின் இந்த பதில் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT