தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள்; சென்னையிலிருந்து வெளியேற தனி வழி: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த விவரங்களை பகிர்ந்து கொண்ட, தமிழகத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை, சென்னையிலிருந்து தினசரி 2,092 பேருந்துகள் இயக்கப்படும். அதோடு 4,900 சிறப்பு பேருந்துகள் என சேர்ந்து மொத்தமாக 11,176 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் கிளாம்பாக்கம், மாதவரம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும். அதேபோல், நவம்பர் 2 முதல் 4ஆம் தேதி வரை, சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்ப 2,092 பேருந்துகள் மற்றும் 3,165 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
Twitter Post
வழித்தடங்கள் எங்கே?
கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்-கிளாம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல, காரில் சொந்த ஊர் நோக்கி செல்லும் பயணிகள், தாம்பரம்- பெருங்களத்தூர் வழித்தடத்தை தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தினார். அதற்கு மாற்றாக திருப்போரூர்- செங்கல்பட்டு வழித்தடத்தையோ அல்லது வண்டலூர் அவுட்டர் ரிங் ரோடு வழியாகவோ வெளியே செல்லுமாறு கூறினார்.