NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பண்டைய இந்தியாவில் மக்கள் தீபாவளியை எப்படி கொண்டாடினர்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பண்டைய இந்தியாவில் மக்கள் தீபாவளியை எப்படி கொண்டாடினர்?
    இந்தியா முழுவதும் நாளை தீபாவளி கொண்டாடப்பட இருக்கிறது.

    பண்டைய இந்தியாவில் மக்கள் தீபாவளியை எப்படி கொண்டாடினர்?

    எழுதியவர் Sindhuja SM
    Nov 11, 2023
    07:06 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒவ்வொரு சனிக்கிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் வரலாற்று நிகழ்வு கட்டுரையை படித்து, இந்திய மற்றும் உலக வரலாற்று நிகழ்வுகளை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

    இந்தியா முழுவதும் நாளை தீபாவளி கொண்டாடப்பட இருக்கிறது.

    வீட்டிலும் வாழ்க்கையிலும் ஒளியை சேர்க்கும் இந்த தீபாவளி தினத்தன்று நமது முன்னோர்கள் எப்படி தீபாவளி கொண்டாடினார்கள் என்பதை இப்போது பார்க்கலாம்.

    நாம் அடிக்கடி சொல்வதை போல, மாற்றம் என்பது மட்டுமே மாறாதது 50 வருடங்களுக்கு முன்னால் தீபாவளி கொண்டாடப்பட்டதற்கும் இப்போது கொண்டப்படுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

    ஜேக்சஸ்

    நமது பாட்டிகள் எப்படி தீபாளியை கொண்டாடினார்கள்?

    முன்பெல்லாம் பண்டிகைகள் வணிகமயமாக்கப்படவில்லை. பொருட்களை விற்பதற்கும் வாங்குவதர்காவும் மட்டுமே ஒரு பண்டிகையை மக்கள் கொண்டாடவில்லை.

    முன்பெல்லாம் பண்டிகைகள் மிகவும் எளிமையாகவே கொண்டாடப்பட்டன.

    ஒரு 50 வருடத்திற்கு முன் வாழ்ந்த மக்கள் தங்களது வீட்டிற்கு லட்சுமி தேவி வருவாள் என்ற நம்பிக்கையுடன் தீபாவளிக்கு முன்பு வீடுகளுக்கு வெள்ளையடித்து தேவையில்லாத பொருட்களை வெளியே வீசினர்.

    குடும்பத்தோடு தீபாவளியை கொண்டாட இரண்டு வாரத்திற்கு முன்பில் இருந்தே இனிப்பு மற்றும் கார சிற்றுண்டிகள் வீட்டிலேயே செய்யப்பட்டன.

    தீபாவளியை கொண்டாட வீட்டில் இருந்த அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.

    ஜ்வ்க்

    காற்று மாசுபாட்டை பற்றிய புரிதல் இல்லாத காலகட்டம்

    மேலும், அப்போதெல்லாம் காற்று மாசுபாட்டை பற்றிய புரிதல் இல்லாததால் தீபாவளியை கொண்டாட நிறைய பட்டாசுகள் வாங்கப்பட்டன.

    மாசுபாட்டை பற்றிய புரிதல் இல்லாத குழந்தைகள் யாரிடம் அதிக பட்டாசுகள் இருக்கிறது என்பதை பெருமையுடன் வெளியே சொல்லிக் கொண்டனர்.

    அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, தாத்தா, பாட்டி, அண்ணண், தங்கை என்று ஒரு பெரும் குடும்ப பட்டாளமே கூடி பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை உண்டு தீபாவளியை கொண்டாடி களித்தனர்.

    தொலைக்காட்சி அறிமுகமாவதற்கு முன்பு வாழ்ந்த மக்கள், தீபாவளியன்று புளியோதரை, தயிர் சாதம் போன்ற உணவுகளை செய்து தூக்கு சட்டிகளில் கட்டி கொண்டு மலை கோவில்கள், அருவிகள் போன்ற இடங்களுக்கு சென்று தங்கள் குடும்பத்தோடு தீபாவளியை கொண்டாடினர்.

    ட்ஜ்கவ்கின்ள

    தீபாவளியன்று வீட்டில் கண்டிப்பாக எண்ணெய் பலகாரம் செய்ய வேண்டும் 

    அது போக, பக்கத்து வீடுகள், தெரிந்தவர்களின் வீடுகளுக்கு சென்று தங்களது வீடுகளில் செய்த தீபாவளி பலகாரங்களை கொடுப்பதும் ஒரு வழக்கமாக இருந்தது.

    வருடம் எல்லாம் பேசாத பக்கத்து வீட்டுகாரர்களாக இருந்தாலும் தீபாவளியன்று பலகாரம் கொடுப்பது சம்பிரதாயமாக பார்க்கப்பட்டது.

    மேலும், தீபாவளியன்று வீட்டில் கண்டிப்பாக எண்ணெய் சட்டியை காய வைக்க வேண்டும் என்ற ஒரு வழக்கமும் இருந்தது.

    அதனால் தான், என்ன செய்தாலும் செய்யவில்லை என்றாலும் சிலர் தீபாவளியன்று கண்டிப்பாக வீட்டில் வடை சுடுகிறார்கள்.

    அது மட்டுமில்லாமல், தீபாவளிக்கு காசி, ராமேஸ்வரம் போன்ற புனித நதிகளில் நீராடுவதும் சிறப்புடையதாக கருதப்பட்டது.

    பிளைவெண்

    நவீன தீபாவளிகள் எப்படி கொண்டப்படுகின்றன?

    தற்போது, தீபாவளிக்கு பெரும்பாலான வீட்டில் நிறைய பலகாரங்கள் செய்யப்படுவதில்லை. மாறாக எல்லாம் கடைகளில் வாங்கப்படுகின்றன.

    வீட்டில் இருந்து பலகாரங்கள் செய்வதற்கு யாருக்கும் நேரமும் கிடைப்பதில்லை, விடுமுறைகளும் கிடைப்பதில்லை.

    பெரும்பான்மையான புதிய தலைமுறை குடும்பங்கள் பிழைப்பை பார்ப்பதற்காக பெரும் நகரங்களில் தஞ்சம் அடைந்துவிட்டதால், நகர வாழ்க்கைக்கு ஏற்றவாறு மக்களின் கொண்டாட்டங்களும் மாறிவிட்டன.

    எனினும், புதிய திரைப்படம் பார்ப்பது, பசுமை தீபாவளியை கொண்டாடுவது, நல்ல ஆடைகள் அணிவது, குடும்ப உறுப்பினர்களிடம் தொலைபேசியில் பேசுவது, இன்ஸ்ட்ராமில் மீம்ஸ் அனுப்புவது, அன்புக்குரியவர்களுக்கு ஆன்லைனில் பரிசுகளையும் உணவுகளையும் அனுப்புவது போன்ற விஷயங்கள் மூலம் நவீன மனிதர்களும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தீபாவளி 2023
    தீபாவளி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தீபாவளி 2023

    இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது? தீபாவளி
    இந்த தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மேற்கு வங்காளம் தீபாவளி
    தீபாவளி கொண்டாட்டங்கள் எதற்காக எண்ணெய் குளியலுடன் தொடங்குகிறது எனத்தெரியுமா? தீபாவளி
    விழாக்காலத்தை முன்னிட்டு இந்தியாவில் அதிக தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கும் எஸ்யூவிக்கள் தீபாவளி

    தீபாவளி

    தீபாவளி பண்டிகை - 2 மணிநேரம் பட்டாசு வெடிக்க அனுமதியளித்துள்ளது தமிழக அரசு  தமிழக அரசு
    தமிழ் சினிமாவின் இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீடுகள் நெட்ஃபிலிக்ஸ்
    குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக கூறி போலி இணையதள மோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை  பண்டிகை
    தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்கவேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை தீபாவளி 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025