Loading...
தீபாவளிக்கு 8 மாவட்டங்களில் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட்
தீபாவளிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

தீபாவளிக்கு 8 மாவட்டங்களில் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 05, 2026
05:50 pm

செய்தி முன்னோட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு எல் நினோ நிபுணர் குழு உறுப்பினர் பிரதீப் ஜான் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளனர். கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்றின் காரணமாக, தமிழகத்தின் உட்புற மற்றும் தெற்கு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மிதமான மழை முதல் கனமழை பதிவாகி வருகிறது.

தமிழ்நாடு வெதர்மேன்

'வெதர்மேன்' பிரதீப் ஜான் அறிக்கை

கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் உட்புறப் பகுதிகளில் நல்ல மழை பதிவாகியுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் உட்புறப் பகுதிகளில் திடீர் மழையும், சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழையும் பதிவாகியுள்ளது.

கிழக்கு காற்று தடையின்றி வீசுவதால், இன்றும் இதேபோன்று உள் மாவட்டங்களிலும் தெற்கு மாவட்டங்களிலும் மழை நீடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளி

வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு

IMD அறிக்கைப்படி, நாளை, தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நவம்பர் 7 அன்று திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும்.

தீபாவளி அன்று மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலியில் மிதமழைக்கு வாய்ப்பு.

ADVERTISEMENT