நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளராக நியமனம்
செய்தி முன்னோட்டம்
திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளராக மூத்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நன்கு அறியப்பட்ட ஊட்டச்சத்து நிபுணரும் சமூக ஆர்வலருமான திவ்யா சத்யராஜ், தாழ்த்தப்பட்டோருக்கு உதவுவதில் கவனம் செலுத்தும் மகிழ்மதி என்ற அமைப்பின் மூலம் சேவை முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
ஜனவரி 9, 2025 அன்று அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், பொது சுகாதாரம் மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றில் திமுகவின் அர்ப்பணிப்புக்கு பாராட்டு தெரிவித்தார்.
சிறுவயதிலிருந்தே கட்சியின் சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டவர் என்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.
சேவை
பொதுச்சேவையில் ஆர்வம்
திமுக கட்சியில் இணைந்ததை தொடர்ந்து, திவ்யா பொதுச் சேவையில் தனது ஆர்வத்தைத் தெரிவித்தார் மற்றும் கட்சித் தலைமையால் வழங்கப்படும் எந்தப் பணியிலும் விடாமுயற்சியுடன் பணியாற்றுவதாக உறுதியளித்தார்.
இந்நிலையில், அவர் திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியில் மாநில துனைச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவரது நியமனம் மட்டுமின்றி மேலும் பல உறுப்பினர்களுக்கும் திமுகவில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அமைப்பை வலுப்படுத்த தற்போதுள்ள நிர்வாகிகளுடன் ஒத்துழைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.