Cyclone Ditwa நவ. 30 அதிகாலை கரையை கடக்கும்! 7 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'!
செய்தி முன்னோட்டம்
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள அதி தீவிர புயலான 'தித்வா' (Ditwah), வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 30ஆம் தேதி அதிகாலை நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர பிரதேச கடலோரப் பகுதிகளில் கரையை கிடைக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. புயல் நெருங்குவதால், இன்று முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் ஆந்திராவில் கனமழை முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இன்று மற்றும் நாளை (நவம்பர் 29) சில மாவட்டங்களில் 20 செ.மீ.க்கு மேல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், 7க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' (அதிகபட்ச அபாய எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது.
புயல் நிலவரம்
புயல் நிலவரம் மற்றும் பாதிப்பு முன்னறிவிப்பு
இந்த புயல் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் நவம்பர் 30 வரை மிக கனமழை எதிர்பார்க்கலாம். சில இடங்களில் இன்றும் மற்றும் நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஆந்திர பிரதேச கடலோர பகுதிகளில் நவம்பர் 30 அன்று அதிக கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.