Page Loader
பிளஸ் 2 மாணவர்கள் ஊக்கத்தொகை: விடுபட்டோர் விவரங்கள் சேகரிப்பு 
10, 11, 12 வரை இடை நிறுத்தாமல் படிப்பை தொடர்ந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

பிளஸ் 2 மாணவர்கள் ஊக்கத்தொகை: விடுபட்டோர் விவரங்கள் சேகரிப்பு 

எழுதியவர் Venkatalakshmi V
Oct 02, 2023
09:45 am

செய்தி முன்னோட்டம்

பள்ளி மாணவர்கள், படிப்பை இடைநிறுத்தம் செய்யக்கூடாது என்பதற்காக தமிழக அரசின் சார்பாக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தந்து வருகிறது. இதற்காக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 2012 முதல் 2022 வரை, 10, 11, 12 வரை இடை நிறுத்தாமல் படிப்பை தொடர்ந்த மாணவர்கள் அனைவருக்கும், ஊக்கந்தரும் விதமாக, ரூ.5000 வட்டியுடன் சேர்த்து வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதற்காக மாவட்டந்தோறும் மாணவர்களின் பெயர் மற்றும் விபர பட்டியலை, அம்மாவட்ட கல்வி அலுவலங்கங்கள் தயார் செய்து வருகின்றன. இந்த நிலையில், பட்டியலில் விடுபட்ட மாணாக்கரின் விபரங்களை, சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், சென்னையிலுள்ள பள்ளிக்கல்வி இயக்குநரகத்திற்கு உடனே அனுப்ப வேண்டுமென, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post