மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கும், இயக்குனர் பா.ரஞ்சித்திற்கும் என்ன உறவு?
செய்தி முன்னோட்டம்
கடந்த வாரம் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும், அவர் இறந்ததும் முதல் ஆளாக ராஜாஜி மருத்துவமனைக்கு ஓடோடி வந்தவர்களில் இயக்குனர் பா.ரஞ்சித்தும் ஒருவர்.
அங்கிருந்து, ஆர்ம்ஸ்ட்ராங்கின் இறுதி சடங்கு வரை உடன் இருந்தார் ரஞ்சித்.
இந்த நிலையில் தான், நேற்று நள்ளிரவில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், அரசை கேள்வி கேட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
யாரும் இந்த கொலை பற்றி விரிவான அறிக்கை வெளியிடாத நிலையில், ரஞ்சித் அரசை நோக்கி பல கேள்விகளை முன்வைத்தது, அரசியல் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதன் மூலம், ஆர்ம்ஸ்ட்ராங் இடத்தை ரஞ்சித் நிரப்பக்கூடும் என அவரின் ஆதரவாளர்களுக்கும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
பா. ரஞ்சித்தின் கேள்விகள்
கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான…
— pa.ranjith (@beemji) July 8, 2024
ட்விட்டர் அஞ்சல்
பா. ரஞ்சித்தின் கேள்விகள்
7. ஆதிக்க வர்க்கத்தாரே! எங்களின் சுயமரியாதையின் பொருட்டு நாங்கள் கிளெர்ந்தெழுவதை ரவுடித்தனம் என்கிறீர்கள். வருவோருக்கெல்லாம் லட்சக்கணக்கான புத்தகங்களை அன்பளிப்பாய் கொடுத்தவர், தம்மமே மானுட சமூகத்தின் விடுதலையை தரும் என்று பாபாசாகேப் வழியில் பௌத்தத்தை முன்னெடுத்தவருக்கு எதிராய்…
— pa.ranjith (@beemji) July 8, 2024
தொடர்பு
அரசியல் தாண்டி பா.ரஞ்சித்துக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் உள்ள நட்பு
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் சமாஜ் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அம்பேத்கரிய கொள்கைகளில் ஆர்வம் கொண்டு அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டவர்.
அவரை போலவே அம்பேத்கரின் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர் இயக்குனர் ரஞ்சித்.
அவரின் படங்களின் மூலம் அது வெளிப்பட்டிருப்பதை காணலாம்.
இவர்கள் இருவருமே புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை மூர்த்தியின் சீடர்களாக கருதப்படுகிறார்கள்.
அதனால், சிறுவயதிலிருந்தே ஒன்றாக பயணித்திருக்கின்றனர்.
பா.ரஞ்சித் முதுகலை பட்டம் பெறுவதற்கும், சினிமா துறையில் கால் பதிப்பதற்கும், ஆம்ஸ்ட்ராங் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
தற்போது அன்னாரின் மறைவிற்கு பின்னர் ரஞ்சித் கேட்டிருக்கும் கேள்விகள், அவர் விரைவில் அரசியலில் நுழையக்கூடும் என்பதை காட்டுகிறதாக செய்திகள் தெரிவிக்கின்றன.