விதிமுறைகளை மீறிய திண்டுக்கல் லியோனி; அபராதம் விதித்த காவல்துறையினர்
சென்னை போக்குவரத்து காவல்துறை மோட்டார் வாகன விதிகளை பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டும் வருகிறது. சில நேரங்களில் போக்குவரத்து காவல்துறைக்கு சமூக வலைதளங்கள் மூலமும் புகார்கள் வந்து குவிகின்றன. புகார்களின் அடிபடையில் விசாரணை நடத்தி உடனடியாக அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி. பட்டிமன்றங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு கருத்துக்களையும், பகுத்தறிவு கருத்துக்களையும் பரப்பி மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர். அவரது வெள்ளை நிற சொகுசு காரில் கருப்பு ஸ்டிக்கர் அடர்த்தியாக ஒட்டப்பட்டு பம்பர் பொருத்தப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் லியோனி!
மேலும் வாகன எண் பலகை சரியாக இல்லை என ஒருவர் சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு புகார் அளித்திருந்தார். இதனை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்த சென்னை போக்குவரத்து போலீசார். போக்குவரத்து காவல்துறையினர் அவரது வாகனத்திற்கு 2500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதற்காக 500 ரூபாய், வாகன எண் பலகை முறையாக இல்லாததால் 1500 ரூபாய், பம்பர் பொருத்தப்பட்டதற்காக 500 ரூபாய் என மொத்தம் 2500 ரூபாய் அவரது காருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் பொறுப்பில் இருக்கும் லியோனி, தமிழக அரசு முத்திரை கொண்ட காரில் தான் பவனி வந்தார். இருப்பினும், விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.