தமிழ்நாடு சட்டப்பேரவையில் 'டிஜிட்டல் ஹவுஸ்' திட்டம் இன்று முதல் அறிமுகம்
கணினியுகமாக இருஙக உலகம் தற்போது ஆண்ட்ரைடு யுகமாக மாறி வருகிறது. இதன் வளர்ச்சி தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் தற்போது அறிமுகமாகியுள்ளது. இதற்கு முன்னர் சட்டப்பேரவையில் பட்ஜெட் உள்பட அனைத்து கேள்வி பதில்களும் காகிதவடிவில் தான் இருந்தது. இந்நிலையில் தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்களின் இருக்கைக்கு முன்பாக உள்ள மேசையில் கையடக்க கணினி வைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இப்போது சட்டப்பேரவை இப்பொது காகிதமில்லா சட்டப்பேரவை என்னும் நிலையினை தமிழக சட்டப்பேரவை எட்டியுள்ளது என்று கூறப்படுகிறது. தமிழக நிதியமைச்சர் கடந்த 2 ஆண்டுகளாக இ -பட்ஜெட்டினை தாக்கல் செய்து வருகிறார். இதனால் பேரவையில் காகித செலவு பெரியளவில் மிச்சமாகி வருகிறது என்றும் கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு வெளியிட்ட புதிய திட்டம்
அதன்படி தமிழக சட்டசபையில் இன்று(ஏப்ரல்.,12) முதல் டிஜிட்டல் ஹவுஸ் என்னும் புதிய திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி, உறுப்பினர்கள் மேசை மேல் உள்ள கையடக்க கணினியில் இ -புக் என்னும் செயலி நிறுவப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த நவீன முறையின் மூலம் கேள்வி கேட்கும் உறுப்பினர்கள், பதில் சொல்லும் உறுப்பினர்கள், அவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் இனி மின்னணு முறையின் வழியே பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த டிஜிட்டல் ஹவுஸ் அறிவிப்பினை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.