Loading...
இடைத்தேர்தலில் தவெகவின் வரலாற்றுச் சாதனை; தாராபுரத்தில் சத்தியபாமா அபார வெற்றி, மதுராந்தகத்தில் பிரம்மாண்ட முன்னிலை
இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் தவெக அபார ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

இடைத்தேர்தலில் தவெகவின் வரலாற்றுச் சாதனை; தாராபுரத்தில் சத்தியபாமா அபார வெற்றி, மதுராந்தகத்தில் பிரம்மாண்ட முன்னிலை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 09, 2026
05:46 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது அபார ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. தவெகவின் சத்தியபாமா மொத்தம் பெற்ற வாக்குகள் 66,841 வாக்குகள், திமுகவின் சுகன்யா 57,370 வாக்குகள், அதிமுகவின் பானுமதி 45,280 வாக்குகள், நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா 5,268 வாக்குகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் லட்சுமணன்1,157 வாக்குகள் பெற்றுள்ளனர். தவெக வேட்பாளர் சத்தியபாமா, இரண்டாம் இடம் பிடித்த திமுக வேட்பாளரை விட 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட 19 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

மதுராந்தகம்

மதுராந்தகம்: 20வது சுற்றிலும் தவெக பிரம்மாண்ட முன்னணி

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்று வரும் மதுராந்தகம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் எட்டாத தூரத்திற்கு முன்னிலை பெற்று வெற்றியை எதிர்நோக்கியுள்ளார்.

20வது சுற்று முடிவில், தவெகவின் மரகதம் குமரவேல் 69,561 வாக்குகள் பெற்றுள்ளார். திமுகவின் பரந்தாமன் 50,649 வாக்குகள், அதிமுகவின் கணிதா சம்பத் 45,740 வாக்குகள், நாம் தமிழர் கட்சியின் ஜானகி ராமன் 1,753 வாக்குகள் மற்றும் சிபிஎம்யின் வேட்பாளர் சுகந்தி 1,389 வாக்குகள் பெற்றுள்ளனர்.

மொத்தமுள்ள 21 சுற்றுகளில் 20வது சுற்று முடிவில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 18,912 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர் முன்னிலையில் உள்ளார்.

ADVERTISEMENT