கோவை DIG தற்கொலைக்கான காரணம் இதுதான்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்
இன்று (ஜூலை 7 .,) காலை, கோவை சரக DIG துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்ட செய்து தமிழ்நாட்டை உலுக்கியது. டிஐஜி விஜயகுமார் என பெயர்கொண்ட அந்த அதிகாரி, கைத்துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு கொண்டதாக கூறப்பட்டது. இதற்கான சரியான காரணம் அப்போது வெளியாகாத நிலையில், தற்போது தற்போது தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். அவரின் அறிக்கைபடி, விஜயகுமார் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும், அதற்காக மருந்துகள் எடுத்துக்கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார். அவர் தற்கொலை செய்து கொள்ள, பணிச்சுமை காரணமல்ல என சங்கர் ஜிவால் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார்.
கேம்ப் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டார் விஜயகுமார்
இறந்துபோன காவல் அதிகாரி விஜயகுமார், இன்று அதிகாலை 6.45 மணியளவில் வழக்கம் போல நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்படியே தனது கேம்ப் அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கிருந்த தனது பர்சனல் செக்யூரிட்டி ஆபிசர் (PSO)விடம் இருந்து, கைத்துப்பாக்கியை தனது அறைக்கு சென்றுள்ளார். அங்கு தான், தன்னை தானே சுட்டுகொண்டு தற்கொலை செய்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் கோவை DIG -யாக பொறுப்பேற்கும் முன்னர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி உள்ளார். NEET பொதுத்தேர்வு ஊழல் வழக்கு, சாத்தான்குளம் கொலை வழக்கு என பல முக்கிய வழக்குகளை திறம்பட கையாண்டவர் விஜயகுமார். அவரது மனைவியும் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.